வண்ணதாசன் |1|
'காற்றைப் பார்த்தேன்' என்று சொன்னேன் 
நீங்கள் நம்பவில்லை
'சருகுகள் நகர்ந்தன' 
என்று சொன்னேன் 
நீங்கள் நம்பினீர்கள்
எதையும் நம்பும்படியாகச் 
சொல்லவேண்டி இருக்கிறது 
உங்களுக்கு.

- வண்ணதாசன்

(தொகுப்பு : நொடிநேர அரைவட்டம்)

Comments