குமரகுருபரர் |1|தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினுங்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே இவர்க்குநாம் என்று

(பொருள்.) 

தம்மின் மெலியாரை நோக்கி - தம்மை விடச் செல்வத்திற் குறைந்திருப்பாரைப் பார்த்து,தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க - தாம் பெற்ற செல்வப்பொருள், அம்மா!மிகுதியாகும் என்று உள்ளம் மகிழ்ந்து கொள்க: (ஆனால்) தம்மினும் கற்றாரை நோக்கி தம்மைவிட மிகுதியாகப் படித்திருப்பவர்களைப் பார்த்து, நாம் கற்றதெல்லாம் எற்றே இவர்க்குஎன்று கருத்து அழிக - நாம் படித்த படிப்பெல்லாம் இவர் படிப்புக்கு எந்த அளவின் தன்மையதுஎன்று வருந்திச் செருக்குக் கருத்தை விட்டுவிடுக.

Comments