தொ.பரமசிவன் |1|


மதிப்பிற்குரிய பேரா தொ.பரமசிவனின் நூல்களை புத்தகக் கண்காட்சியில் மறக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள். 'உரைகல்' அதிலொரு முக்கியமான புத்தகம்.

நாட்டார் தெய்வங்களைக் குறித்து அவர் எழுதிய தெய்வங்களின் உணவுரிமை என்கிற கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டது இந்த கீழ்க்கண்ட வரிகள்.

சிறு தெய்வங்கள் என்று சொல்லாமல்  தெய்வங்கள் என்றே பயன்படுத்துங்கள். நம் முன்னோர் மூத்தோர், மற்றும் நம் காவல்தெய்வங்களாகிய குலதெய்வங்களே நம்முடைய பிரதான தெய்வங்கள்.

நம்மைக் காக்கிற,காத்த மனிதர்களே, முன்னோர்களே நம் தெய்வங்கள் என்பது எனது தீர்க்கமான நம்பிக்கை.

பெரிய தெய்வம் சிறிய தெய்வம் என்றெல்லாம்.உலகில் எதுவும் இல்லை.

தெய்வம் என்றால் ஒரே தெய்வம். பேரா.தொ.ப வின் சொற்கள் தான் என் சொற்களும் கூட.

#நாட்டார்_தெய்வ_வழிபாடு
#தொ_பரமசிவன்
#உரைகல்

Comments