வைக்கம் முகமது பஷீர் 1


"நான் ஒன்று கேட்கட்டுமா?
கடவுள் இருக்கிறானா?"

"தேவைப்படுபவர்களுக்கு இருக்கிறான்"

- வைக்கம் முகமது பஷீரின் 'சப்தங்கள்' குறுநாவலிலிருந்து.

சப்தங்கள், என்னை முதல் வாசிப்பிலேயே  அத்தனை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு புத்தகம். பஷீருக்கு மட்டுமே வாய்த்தது அந்தக் கொடையான எழுத்து. மனிதர் இதைத் திரைப்படமாகக் கருதினால். இடைவேளையில் நம்மை வாய்மேல் கைவைத்து இதுவரை வாசித்ததைத் திரும்ப வாசிக்க வைத்துவிடுவார். அத்தனை இன்ப அதிர்ச்சியூட்டும் எழுத்து. நான் பஷீர் எழுத்தின் மூலம் நிகழ்த்தும் அந்த அற்புதத்தை மட்டுமே லயித்துப் பேசுகிறேன். அந்த நாவலின் கதையை, வாசிப்பனுபவத்தை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

சமீபத்தில் மலையாளத்தில் ஆலோருக்கம் என்றொரு திரைப்படம் பார்த்தேன். பஷீர் எழுதியிருக்கும் எழுத்தில் ஒரு துளி அந்தத் திரைப்படம். ஒரு துளி மட்டுமே. அப்படியாயின் பஷீர் எவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்திருப்பார். எத்தனை அற்புதங்களை நிகழ்த்தியிருப்பார்.

•• www.cheravanji.com ••

Comments