முன்பிருந்த
தரைத்தள வீட்டைப் போல
இரட்சிப்பின் ஒளியேதுமற்ற
இம்முதல்தள வீட்டில்
முன்பைப் போலவே
மழையடிக்கிறது
முன்பைப்போலவே
வெயிலடிக்கிறது
முன்பைப்போலவே
காற்றடிக்கிற சருகு குவிகிற
உப்பரிகையில்
முன்பைப்போலவே
அணில்களும் வந்தால்
இருந்திருப்போம் தானே
முன்பைப்போலவே
நாமும்.
Comments
Post a Comment