வண்ணதாசன் 10


இந்தப் பேரண்டத்தையே ஒரு சொற்கூண்டிலடைத்தைப் போலொரு கவிதையிது என்பேன்.

நல்லது கெட்டது, நியாய அநியாயங்கள்
உத்தமங்கள் அபத்தங்கள், என மனித மனமும் வாழ்வும் இரண்டடுக்களாலானது. நாம் பெரும்பாலும் ஒரு சார்பாய் வாழுகிற மனிதர்கள் தானே? நன்மையை மட்டும் எதிர்பார்க்கிறவர்கள். அழகை மட்டும் ஆராதிக்கிறவர்கள்.கடவுளை மட்டும் வணங்குகிறவர்கள். மழையை மட்டும் ரசித்து வெயிலைப் பழிப்பவர்கள். அப்படித்தானே? வண்ணதாசனுடைய உலகம் வண்ணநிலவன் சொன்னதைப் போல ஒரு கண்ணில் சௌந்தர்யமும் மற்றொரு கண்ணில் கருணையும் நிறைந்தது.

கூண்டை ரசிக்க ஒரு கண்.
பறவையை ரசிக்க மற்றொரு கண்.

வண்ணதாசன் எற்றுக்கொள்கிற வகையில் சரியாகச் சொல்லவேண்டுமெனில்

இருகண்களும் தனித்தனியில்லை. இரண்டிலும் கொஞ்சம் சௌந்தர்யமும், கொஞ்சம் கருணையும் சம அளவில் கலந்திருக்கின்றன. கண்கள்  தனித்தியங்குவதில்லை. இரண்டு கண்கள் என்றாலும் பார்வை ஒன்றுதானே.

Comments