மிகச்சிறந்த மூன்று தமிழ்ப் பாடல்கள்1.அவளும் நானும்
2.பாயுமொளி நீயெனக்கு
3.எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி

இந்த மூணு பாட்டோட அழகை ஒரு மூணு மணி நேரம் பேசலாம். அத்தனை அழகானது! அத்தனை ஆழமானது!

ஒரு துளி சொல்றேன்...

மீனும் புனலும்

• நீ மீன். நீ ஒரு குட்டி குட்டி மீன். இஷ்டத்துக்கு எனக்குள்ள என் அன்பு வெளியில, அன்புப்பரப்புல,என் நீரலைகள்'ல  நீந்தித் திளைக்கிற, சந்தோஷத்துல  துள்ளிக்குதிக்கிற அன்பும், வெளியும், உரிமையும், கட்டற்ற எல்லையற்ற ஒரு சுதந்திரமும் உனக்கு இருக்கு. உனக்கு அதை நான் தரலை..காலம்.கொடுத்திருக்கு...இயற்கையின் கொடை அது. அதைப் புரிஞ்சுக்கிட்டது மட்டும் தான் என் செயல்.

நீ மீன் நான் புனல்.


வானமழை நீயெனக்கு
வண்ணமயில் நானுனக்கு

பெய்யும் மழை நீ, நீ பெய்யும் போது நான் யாரு? வண்ணமயில். உன் வருகையை எண்ணித் தோகை விரித்தாடுகிற வண்ணமயில். சரி. இதோட முடியலை இதனழகு. இந்தப் பாடலோட முழுக் கருபபொருளும் அந்தக் கடைசிச் சொல்தான்.

சரி நீ மழை, சரி நான் மயில். நான் மயிலா இருந்தாலும் நான் யாருக்கு? எனக்கு இல்ல. உனக்கு.

மழையா பெய்தது நீ
மயிலா ஆடினது நான்.
நீ பெய்யலைண்ணா எதுக்கு நான் சந்தோஷப்பட முடியும்?
ஆக மழையும் நீ, மழையின் பயனாய் எனக்குக் கிடைத்த சந்தோஷமும் உனக்கே/நீயே.

எல்லாத்தையுமே he will just give it to kannammaa! The art of submitting or surrendering to the beloved.
The praise, the benefits, happiness that she give to him எல்லாத்தையுமே அவகிட்டையே திருப்பிக் கொடுத்துருவான்.

அந்த submitting to the love and being selfless.. அதை விளக்குற பாடல் தான் இந்தப் பாடல் முழுக்க.

அசுர போதை. ஒவ்வொன்னுக்குள்ளும் ஆழமாப் பரவினா. அசுர போதை.

நாள் முழுக்கப் பேசலாம்

வானமழை நீயெனக்கு
வண்ணமயில் நானுனக்கு


அந்த மூணாவது பாட்டு இதுக்கெல்லாம் மேல. கஞ்சா போதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய கொடூர போதையான பாட்டு தான்.  முழுசா உணர்ந்துட்டா பேச முடியாம நெக்குருகும். அய்யோ அதோட அதிர்வே தனி. ஒருத்தனுக்கு வரமிருந்தா அந்தப் பாட்டை சரியாப் புரிஞ்சு நீச்சலடிச்சு இந்த வாழ்க்கையோட பேரழகை ரசிச்சுக்கலாம்.

#பாரதி #பாரதிதாசன்

Comments