புத்தகப் பரிந்துரை - 1 - டோட்டோ சான்
நீங்கள்
தினமும் மலைகளிருந்து கொஞ்சம்
கடலிலிருந்து
கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா?
என்ன அது
மலையிலிருந்து கொஞ்சம் கடலிலிருந்து கொஞ்சம் என்று கேட்கிறீர்கள் தானே? சொல்கிறேன்.
டோக்கியோவில் தலைமை ஆசிரியர் ‘கோபயாஷி’யின் கனவுத்திட்டத்தால் உருவாக்கப்பட்டது
டோமோயி என்கிற முன்மாதிரிப் பள்ளி. இங்கு படித்த டெட்சுகோ குரோயானாகி என்பவர் ( தற்போது
85 வயது, டோக்கியோவில் வசிக்கிறார்)
முதல் வகுப்பிலேயே, அதீத
சேட்டை செய்கிற சிறப்புக் குழந்தையாக இருக்கிறார் என்று தன் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். பின் அவரது அம்மா
அவரை அந்தப் பகுதியில் இருக்கிற மிகவும் வித்தியாசமான இன்னொரு முன்மாதிரிப் பள்ளியான
டோமோயி பள்ளியில் சேர்க்கிறார்.
அங்கு எல்லாமே
வித்தியாசம் தான்.
வகுப்பறைகளாக
பழைய கைவிடப்பட்ட ரயில்பெட்டிகள், விவசாயி ஒருவரே வந்து விவசாயம்
தொடர்பான அனுபவ வழிப் பாடத்தை சொல்லித்தருவருது, திறந்த வெளிச்
சமையல் வகுப்புகள், மேலும் ஒவ்வொரு பிள்ளைகளும் தாங்கள் விரும்புகிற
பாடத்தை விரும்புகிற நேரத்தில் படித்துக்கொள்ளும் சுதந்திரமான பாடமுறை, தேவைப்பட்டால் மட்டும் ஆசிரியர்களின்
உதவியை நாடிக்கொள்ளும் வசதி, வெளியே
பக்கத்து தோட்டங்களுக்கு, காடுகளுக்கு நடை போவது, பள்ளியிலேயே இரவில் தங்கிக்கொள்வது,
நட்சத்திரம் பார்ப்பது, பூக்களைப் பற்றிப் பேசுவது,
பள்ளி நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பது, சுற்றுலா
செல்வது, இயற்கையோடு சேர்ந்தே வாழ்வது என்று குழந்தைகளுக்கு எல்லாமே
அனுபவ வழிக் கல்வியாக, புதுமையாக இருந்தது.
எந்த நேரமும்
பாடப் புத்தகத்தையே படித்துக்கொண்டு இருக்காமல் எப்போதும் புதுமையாக எதையாவது செய்ய
வைத்துக்கொண்டே இருக்கிற கல்வி முறையை தலைமை ஆசிரியரும், மற்ற பள்ளி நிர்வாகிகளும்
குழந்தைகளுக்குத் தந்துகொண்டே இருந்தார்கள். குழந்தைகள் தாங்கள் கற்ற கல்வியை மறக்காமல்
இருப்பதற்கு மலையிலிருந்து கொஞ்சம் , கடலிலிருந்து கொஞ்சம் போன்ற
எளிய வழிமுறைகளை, பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுத்தார்கள்.
கடலில் இருந்து
கிடைக்கிற மீன், இறைச்சி, மலைகளில் விளைகிற காய் கனிகள், கிழங்கு வகைகள், கீரைகள் என்று சிறுவர்கள் தினமும் மதிய
உணவு கொண்டு வர வேண்டும். தலைமை ஆசிரியரும், அவரது மனைவியும்
மதிய உணவைத் தொடங்கி வைத்து எல்லோரும் கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்
கொண்டு வந்திருக்கிறார்களா என்று பரிசோதிப்பார்கள். அப்படிக் கொண்டு வர இயலாத குழந்தைகளுக்கு
மற்ற குழந்தைகளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஒரு பெரிய தட்டில் பெற்று பங்கிட்டு அளிப்பார்கள்.
நண்பர்களுக்கு
உதவும் தன்மை, எல்லோரையும் சரிசமமாய் பார்க்கும் மனப்பான்மை, இயற்கையோடு
இயைந்த கல்வி முறை என, இந்தப் பள்ளியில் படித்த சிறுவர்கள் பின்னாளில்
சிறந்த மனிதர்களாக உருவானார்கள். அவர்களில் ஒருவரும், ஜப்பானின்
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றுபவருமான ‘டோட்டோ சான்’ என்கிற டெட்சுகோ
குரோயானாகி என்பவர் தன் பள்ளி நாட்களை மையமாக வைத்து எழுதிய சுயசரிதையே இந்த ‘டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி’ நூல்.
பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும்,
பெற்றோர்களும் இந்த நூலை அவசியம் தேடி வாசிக்கவேண்டி பரிந்துரைக்கிறேன்.
அருமை வாழ்த்துக்கள்
ReplyDelete