குறுந்தொகை 1மனைவியின் மோர்க்குழம்பு இனிது.

**
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்நுதல் முகனே

**
முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போன்ற  மெல்லிய விரல்களைக் கழுவாமலேயே

சரிந்து விழும் தன் துவைத்த சேலையின் முன்றானையைச் சரிசெய்து,

குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளித்தப்புகை நிறைய,

தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை

“இனிது” என்று சொல்லிக் கணவன் உண்ணும்போது
மிக நுட்பமாக மகிழ்ந்தது ஒளிமிகுந்த நெற்றியையுடைய அவளது நுதல் (நெற்றி)

**
குறுந்தொகை : 167
ஆசிரியர் : கூடலூர் கிழார்
திணை : முல்லை

#குறுந்தொகைக்_காட்சிகள்

Comments