பாரதியம்


பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா!


*பின்னை

நப்பின்னை என்பவள், பழந்தமிழ் நூல்களும் சைவத் திருமுறைகளும், வைணவப் பாசுரங்களும் குறிப்பிடும் கண்ணனின் மனைவியாவாள். நப்பின்னை, கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் தமையனான கும்பக்கோன் மகள். அவளுடன் கண்ணனும், பலராமனும் இணைந்து சிறுவயதில் ஆடும் குரவைக்கூத்தையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது. மிதிலை அரசனான கும்பக்கோன் தன் காளைகளை அடக்குபவனுக்கு நப்பின்னை கிடைப்பாள் என்று அறிவித்து வைக்கும் போட்டியில் கண்ணன் கலந்துகொண்டு, ஏறுதழுவி வென்று, நப்பின்னையை மணம் புரிகின்றான் என்று கதையாகச் சொல்லப்படுகிறது.

பாரதியம் #bharathy100 #பாரதி100

Comments