கீழடியில் கிடைத்த தமிழ்த் தொன்மங்கள்மதுரை-இராமேச்சுரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை தெப்பக்குளத்திற்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் சிலைமான் என்ற ஊர் உள்ளது.  சிலைமானுக்குத் தெற்கே 2கி.மீ. தொலைவில் கீழடி என்ற ஒரு  ​கிராமத்தின் ஒரு பகுதியாக “கீழடி பள்ளிச்சந்தை“ என்ற ஒரு சிற்றூர் உள்ளது.  இன்று இச்சிற்றூரானது உலக வரைபடத்தில் இடம்பெற்று வருகிறது. அங்கே பூமிக்கு அடியில் ஒரு நாகரிகமிக்க நகரமே புதையுண்டு கிடைப்பதைத் தொல்லியல்துறையினர் கண்டறிந்து ஆராய்ந்து வருகின்றனர்.


Comments