இசை வேளாளர் | இன்னியம் 01

இசை வேளாளர் :

பயிர் பச்சைகளைப் பேணி வளர்த்துப் பாதுகாத்து உலகத்துக்குச் சோறிடும் தருமம், பசை வேளாளர்களாலேயே தரமுடிவது போல,

சுருதி சுத்தமான இசையைப் பேணிப் பாதுகாத்து உலகத்துக்கு தரும் தருமம் இசை வேளாளர்களுக்கு மட்டும் சாத்தியம்.

- கி.ரா (கி.ராஜ நாராயணன்)

இசை வேளாளர் என்பது இன்னியம் வல்லார்களான இசைக்கலைஞர்களைக் குறிக்கிற சாதிப் பெயர். மேளக்காரர்கள் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை அழைக்கப்பட்டார்கள்.

வேளாண்மை செய்கிறவர்கள் வேளாளர்கள். இசையை வேளாண்மை செய்கிறவர்கள் இசை வேளாளர்கள். எவ்வளவு அருமையான சொற்பின்னல் இது.

விக்கீ சொல்கிறது..

1930களில் தேவதாசிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை இசை வேளாளர்கள் என பெயர் மாற்றிக்கொண்டனர். தங்களை இசையை குலத்தொழிலாகக் கொண்டதினால் இவர்களுக்கு இசை வேளாளர்கள் என்ற பெயர் வந்தது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இசையின் வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோல்கருவி, நடனம் எனப் பல துறைகளில் பல இசை வேளாளர்கள் பெயர் பெற்றுள்ளனர்.

இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கும் கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது என்றிருந்த சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத்தந்தார்.

முழுக்க முழுக்க இசைப் பாரம்பரியத்தை மட்டுமே குறிக்கிற ஒரு சொற்கூட்டு இந்த 'இசை வேளாளர்' என்பது. இசை வேளாளர் என்னும் சொற்பின்னல் எங்கிருந்து வந்திருக்கும் என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்து இத்தனை தகவல்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறார் கி.ரா.

#இன்னியம் 01

Comments