வண்ணதாசன் 14அந்த வயலினுக்கு வயதாகியிருந்தது
பழுதாகவே இல்லை நரம்புகள்
அந்த வயலின் வாசிப்பவர்
வயோதிகர் ஆகியிருந்தார்
பழுதாகவே இல்லை விரல்கள்
இப்போது நாம் புசித்துக்கொண்டிருப்பது
ஒரு கனிந்த மரத்தின்
கனிந்த கிளையின்
கனிந்த இசையை

கல்யாண்ஜி


Comments