வாசிக்க வேண்டிய புத்தகம் 2


கடல்புரத்தில் - கிளாசிக்

கடைசிப் பக்கத்தை வாசித்துவிட்டு மூடி வைக்கிற போது  ஏதோ நிம்மதியான ஒரு பெருமூச்சோடு மூடி வைக்கிற புத்தகத்தில் இதுவும் ஒன்று.

வண்ணநிலவனின் இந்தக் 'கடல்புரத்தில்' வாசித்து முடித்தாகிவிட்டது. 110 பக்கங்களில் கடல், கடலோர மனிதர்களோடு பேசும் அத்தனை ரகசியங்களையும் நம்மோடு பேசிவிடுகிறார். கடலை தன் கடைசித் துணையாக நம்புகிற, மனதில் எந்நேரமும் வைத்து நேசிக்கிற, அனைவரும் மிகமுக்கியமாக வாசிக்கவேண்டிய முக்கியமான புத்தகம்.

2013 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சீனியோடு சென்று வாங்கிவிட்டு வந்த புத்தகம். ஆறு ஆண்டுகள் கடலைப் போல காத்திருந்திருந்தும், என்னோடே நான் போகிற பக்கமெல்லாம் இந்தப் புத்தகம் பயணித்தும் வந்திருக்கிறது என்று நினைத்துப் பார்ப்பதற்கே ஏதோ நிறைவாக இருக்கிறது.

"வல்லத்துக்கு உயிர் இருக்கு. கடலுக்கு உயிர் இருக்கு. அலை ஒன்னொன்னுக்கும் உயிரிருக்கு" என்பதை எழுத்தில் இன்னும் கொஞ்சம் அச்சசலாய் தந்திருக்கிற வண்ணநிலவனைப் போலவே இந்தப் புத்தகத்துக்குள் இருக்கிற உயிரை நான் மிகத்தீர்க்கமாக அறிந்தே இருக்கிறேன். அந்த உயிரைக் தீர்க்கமாகக் காதலிக்கிறேன் கூட.

வாசிக்காதவர்கள் அவசியம் வாசிக்கவும். மனதிற்கு நிறைவான ஒரு புதினம்.

Comments