ஒரு பெண்ணோடு சென்றிருக்கிறார் பஷீர்


ஒரு பெண்ணோடு சென்றிருக்கிறார் பஷீர்:

பஷீர் ஒரு பெண்ணோடு சென்றிருக்கிறார். ஒரு புதுப்பெண். ஜெயகாந்தனின் ரசிகை என்று சொல்லிக்கொண்ட ஒரு பெண். எங்கே ஜெயகாந்தனைப் பற்றி ஒரு இரண்டு வரி சொல்லுங்கள் என்று ஆராயாமல் அவரோடு பஷீரை அனுப்பியிருக்கிறேன்.
எப்போது திரும்புவாரோ என்றிருக்கிறது. நிறைய பக்கங்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற அவரது மூக்கு எப்போது வீட்டுக்குத் திரும்ப வரும். கூப்பிட வேண்டும் போலிருக்கிறது. பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பிய தகப்பனின் மனநிலை புத்தகங்களை இரவல் தருவது.
பார்க்கவிக் குட்டீ அதில்தான் இருக்கிறாள். பார்க்கவிக் குட்டியை எப்போது திரும்பப் பார்ப்பேன். இரவல் கொடுத்ததிலிருந்து தான் ஏனோ மீண்டும் அந்தக் கதைகளை எல்லாம் இப்போது புரட்டிப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
சில புத்தகங்களை இரண்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்றை ஜென்மதினத்தில் வரும் ஆணாக, பஷீராக நினைத்துக்கொள்ள வேண்டும் அறைக்கு எப்படியாகினும் அன்றைக்கு இரவில் வந்து சேர்ந்திடுவான் என்று நம்பலாம். இன்னொன்றை நீலவெளிச்சத்தில் வருகிற பார்க்கவிக் குட்டியாக நினைத்துக்கொள்ள வேண்டும். பேய் தானே! வீட்டை விட்டுச் சென்றாலும் கவலையில்லை. அது போகும் வரும் அது இஷ்டத்துக்கு விட்டுவிடலாம்.

புகைப்படம் : shameem AM

Comments