நவீன் கவுதமின் மரம்

நான் போற இடமெல்லாம் இருக்குற ஒற்றை மரத்தையெல்லாம் எடுக்கும் போதுதான் மெரினாவில் இருந்த இந்த மரத்தையும் எடுக்க ஆரம்பிச்சேன், மெரினா பீச்சுலயே அடிக்கடி சுத்திகிட்டு இருந்ததால அந்த மரத்தை தொடர்ந்து எடுக்க ஆரம்பிச்சேன், அப்படி எடுக்கும் போதெல்லாம் அங்க பாணி பூரி கடையில வேலை பார்த்திக்கிட்டு இருந்த ஒரு அண்ணா என்னை கவனிச்சுக்கிட்டே இருந்து ஒரு நாள் ஏன் அந்த மரத்தை போட்டோ எடுக்குறேன்னு கேட்டார், அப்போ என்னோட போட்டோவை காமிச்சு அதை பத்தி பேசிட்டு இருந்தோம். பிறகு போகும்போதெல்லாம் அவர்கிட்ட பேசிட்டு போட்டோ எடுத்துட்டு வருவேன், சில மாதங்களுக்கு பிறகு அந்த மரம் பட்டு போயிருச்சு, ஒரு மழைக்காலத்தில சுத்தமா ஒடஞ்சி போயிருச்சு, அங்கே போகாமலே இருந்தேன்.


ஒரு நாள் மனசு கேக்காம போய் நின்னேன், ஒரு செடி வச்சு வெள்ளை சாக்கு போட்டு மூடி இருந்துச்சு, அது மேல மஞ்சள் தெளிச்சு குங்குமம் வச்சுருந்தாங்க, வெளியில் இருந்தே தண்ணி ஊத்தினா உள்ள போறமாதிரி ஒரு தகரத்தை வளைச்சு வச்சுருந்தாங்க, கிட்ட நின்னு பாத்துட்டே இருக்கும்போது அந்த அண்ணா வந்து “ வா கண்ணு, உனக்காகத்தான் ஒரு கண்ணு வச்சு வளக்குறேன், யாரும் பிடுங்காம இருக்கணும்ன்னுதான் மஞ்சள் தெளிச்சு குங்குமம் வச்சுருக்கேன்னு சொன்னார் “ , என்ன சொல்றதுன்னு தெரியாம திரும்பி வந்துட்டேன்.


சரி அவரை கூட்டிட்டு வந்து நாளைக்கு காமிக்கலாம்ன்னு அவரை பாக்க போனேன், அவர் எங்க இருக்காருன்னே தெரில, அதனால என்ன??? அவர் அந்த மரத்தை கிட்டயே இருந்து பாத்திருப்பார், நீங்க வந்து பாருங்க...


9th Edition photography exhibition,

Chennai Weekend Clickers,

April 6-14

Spaces, Besant Nagar.


நவீனின் ஒற்றை மரப் புகைப்படத் தொகுப்பைக் காண :

https://www.facebook.com/naveengowtham.ng/media_set?set=a.807631255924309&type=3

Comments