வண்ணதாசன் கவிதைகள் 16
ஒரு நட்சத்திரத்தின் பெயரைக் கூட
எனக்குச் சொல்லத் தெரியாது
இந்த வானத்தின் கீழ்தான்
இத்தனை ஆண்டுகள்
வாழ்ந்து வருகிறேன்.
நட்சத்திரம் தெரிவதற்கு,
தெரியவேண்டியது இல்லை
நட்சத்திரத்தின் பெயர்.

*
கல்யாண்ஜி

Comments