உலகப் பேரழிவு


இப்புவியில் ஆறாவது முறையாக "உயிர்களின் பேரழிவு" நடைபெற இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது,மேலும் இன்னும் சில வருடகாலத்தில் சுமார் 10லட்சம் உயிரினங்கள் முழுவதும் அழிந்துபோக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இப்போது நடைபெறும் சீர்கேடுகள் தொடருமானால் அடுத்த 150 ஆண்டுகளுக்குள் இப்புவியிலுள்ள 75% உயிரினங்கள் முழுவதும் அழிந்துவிடும் அதன்தொடர்ச்சியாக மனிதர்களின் இருத்தியல் கேள்விக்கு உள்ளாகும் என்று முகத்தில் அறைந்து சொல்கிறது அந்த அறிக்கை:-

இதற்கு முன்னர் எப்போதெல்லாம் "உயிர்களின் பேரழிவு" நடைபெற்றுள்ளது, அதற்கான காரணங்கள் என்ன?

அலசி பார்த்ததில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஐந்து "உயிர்களின் பேரழிப்பு" காலத்தில் மனித இனமே தோன்றவில்லை, அவை அனைத்தும் பல்வேறு புறக்காரணிகளால் ஏற்பட்டன என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த ஐந்து பேரழிவுகளும் எப்போது நிகழ்ந்தன, எதனால் நிகழ்ந்தன?

1. ஆர்டோவிசியன் பேரழிவு (ORDOVICIAN EXTINCTION)
காலம்: 445மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்)
அழிந்த உயிர்கள் :சுமார் 60%-70% உயிர்கள்
காரணம்: குறுகிய காலத்தில் உருவான தீவிரமான பனிக்காலம்

2. டேவோனியன் பேரழிவு (DEVONIAN EXTINCTION)
காலம்: 375-360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
அழிந்த உயிர்கள்: சுமார் 75% உயிரினங்கள்
காரணம்: பெருங்கடலில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை

3. பெர்மியன் பேரழிவு (PERMIAN EXTINCTION )
காலம்:சுமார் 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
அழிந்த உயிர்கள்: சுமார் 90% உயிரினங்கள்
காரணம்: சிறுகோள்கள் அல்லது விண்கற்கள் மோதியதால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் எரிமலை வெடிப்பு

4. ட்ரையாசிக் பேரழிவு (TRIASSIC EXTINCTION )
காலம்:சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
அழிந்த உயிர்கள்: சுமார் 70%-80% உயிரினங்கள்
காரணம்: பல்வேறு காரணங்கள், சரியான முடிவிற்கு வருவதர்க்கு விவாதங்கள் நடைபெறுகின்றன

5. கிரெடேசியஸ் பேரழிவு (CRETACEOUS EXTINCTION )
காலம்:சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
அழிந்த உயிர்கள்: சுமார் 75% உயிரினங்கள்
காரணம்: சிறுகோள்கள் அல்லது விண்கற்கள் மோதியதால் ஏற்பட்ட பாதிப்பு

மேற்சொன்னவற்றிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ள முடிகிறது, இப்போது நடைபெறப்போகும் "ஆறாவது ஊழிக்கு" முழுக் காரணமும் மனிதர்களாகிய நாம்தான்.

நடைபெறப்போகும் ஆறாவது ஊழிக்கு முக்கிய காரணிகளாக IPBES கூறுவது:-

1. கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற நிலம் மற்றும் கடல் வள (Land and Sea use) பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள்
2. மிகஅதிகமாக உயிரினங்களை வேட்டையாடியது அல்லது சுரண்டியது (மிக அதிகமான கடல்வளத்தை பயனப்டுத்தியது)- உதாரணம் mindless fishing
3. காலநிலை மாற்றம்
4. காற்று மற்றும் நீர் மாசு
5.  அயல் உயிர்களின் ஊடுருவல்

Comments