இசை கவிதைகள் - 2


முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே
உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே
இன்று
ஒரு முழு நிமிடம்
சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன்.
"இப்படி
ஒவ்வொரு நாளும்
ஒரு முழுநிமிடம்
எதன் முன்னேனும் கைகட்டி நில்" என்று
எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்

கவிஞர் இசை

Comments