முத்துராசா குமார் கவிதைகள் - (பிடிமண்)‘படகுக் கவிழ பிரார்த்திக்கிறாயே’ என்று
எனக்கு சாபம் விட்டுச்சென்ற நீங்கள்
மீதிக் கதையையும்
கேட்டுப் போயிருக்கலாம்
நீண்ட காலமாக கரை திரும்பாத
அந்த ஆளற்ற படகில்
நடுத்தர வயது மீனொன்று
துள்ளிக் குதித்து துடிதுடிக்கிறது.


-முத்துராசா குமார்

(பிடிமண் கவிதைத் தொகுப்பு - சால்ட் பதிப்பகம்)

Comments