விக்ரமாதித்யன் கவிதைகள்


பேச்சோ எழுத்தோ
பிரயோகம் பண்ணப் பண்ண
அயர்வும் சலிப்பும் தாளமுடியவில்லை
எப்பொழுதாவதுதான்
அமைகிறது ஒரு நல்ல உரையாடல்
எப்பொழுதுதாவதுதான்
வாய்க்கிறது ஒரு நல்ல கவிதை
எப்பொழுதாவதுதான்
எடுக்கவேண்டும் போல
மொழியெனும் சிவதனுசை.
நடுவிலொரு தீவு
வேர்கள்
வளர்த்தும் விழுதுகள்
வெளிச்சம்
தின்ற இருட்டு
நாளையை
நம்பியே இன்று
இன்றென்பது
நேற்றின் எச்சம் போல
உடம்பிலிருந்து
மனசுக்கு
காமத்திலிருந்து
கவிதைக்கு
இங்கே இப்படி
அங்கே எப்படியோ
கடலலைகளுக்கு
ஓய்வுண்டா

-
விக்கிரமாதித்யன் அண்ணாச்சியின் கவிதையிலிருந்து ஒரு பகுதி.

Comments