பிரான்சிஸ் கிருபா கவிதைகள்


கனத்த மௌனத்தின் ரேகையாக
வேர்கள் ஆழ்ந்து எங்கே செல்கின்றன
நாளை இது மரமாகும் போது
அதன் கிளைகளில் கோடையின் ஒளித்துகில்கள் நழுவலாம்
அதன் இலைகளில் மார்கழி அமுதம்
மதுவாக வழியலாம்
அதன் மலர்களில்
காதல் புன்னகைக்கலாம்
அதன் காய்களில் சாத்தான் புளிக்கலாம்
அதன் கனிகளில் கடவுள் கூட இனிக்கலாம்
அவற்றுள் அடக்கமில்லை
இந்தப் பாறையின் ருசி
பாறையை உண்டு பசியாறியவன்
என்ற தகுதியில் இதன் ருசியை
என்னால் கூற முடியும்
அப்போது நான் மீண்டும் பிறந்தால்..
அன்றும் இந்த மரம் இருந்தால்..
~~
ஃபிரான்சிஸ் கிருபா

'நிழலின்றி ஏதுமற்றவன்' கவிதைத் தொகுப்பிலிருந்து...

Comments

Post a Comment