தி.ஜானகிராமனும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனும்


அம்மா வந்தாள் நாவலை நேற்று தொடங்கி இன்று வாசித்து முடித்தேன். 191 பக்கங்கள். கதையில் இந்துவும், அப்புவும் சந்திக்கிற முதல் காட்சியிலிருந்தே எனக்கு அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களின் ஹவுஸ் ஓனர் திரைப்படத்தில் நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகரும், பசங்க கிஷோரும் தான் நினைவுக்கு வந்தார்கள். நீங்களும் அம்மா வந்தாள் நாவலைப் படிக்க நேர்ந்தால், கதாப்பாத்திரத்தைக் குறித்த உங்கள் கற்பனை சித்திரத்திற்கு இவர்கள் முழு உருவம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனும் இந்தத் திரைப்படத்தை மிகத்திறமையான முறையில் படைப்பாக்கித் தந்திருக்கிறார். படத்தில் இடம்பெறுகிற "நளினமே நளினமே" பாடலை நாவலில் வருகிற இந்துவுக்கும், அப்புவுக்கும் கூட ஓட்டிப்பார்க்கலாம். நான் பார்த்தேன். வாசிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு அன்பிற்குரிய நம் பவா செல்லத்துரை அவர்கள் வரும் 1ஆம் தேதி இந்தக் கதையை பெருங்கதையாடலில் சொல்லப் போகிறார் என்றறிகிறேன். கதை சொல்லல் நிகழ்வின் காணொளி கிடைத்ததும் பகிர்கிறேன். அப்போது லவ்லினையும், கிஷோரையும் - இந்துவாகவும் அப்புவாகவும் நினைவிலிருத்திக்கொள்ளுங்கள்.

Comments