கவிஞர் சச்சிதானந்தன்காதலில் வீழ்ந்தபோது என் இதயத்தைத் தவறி வைத்தேன்

கவிதை கிறுக்க ஆரம்பித்தபோது உருவகங்களை.

பின்னாளில், குன்றுகளைப் பார்க்கையில்
வானம் அவற்றை வைத்து மறந்துவிட்டதாய் நினைத்தேன்
மேகங்கள் வானவில்களை.

அண்மைக்காலமாய்
நாமிருக்கும் இந்த பூமியும்
கடவுளால் மறந்து வைக்கப்பட்டுவிட்டதோ என
சந்தேகிக்கிறேன்.

ஞாபகம் வரும் வரிசையில் அவர் மீட்டுக்கொள்கிறார்:
காடுகள், நதிகள், நாம்.

- கவிஞர் சச்சிதானந்தன்

Comments