தொய்யில் என்றால் என்ன?தொய்யில்:

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,
பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:
....
....
~~

தண்ணீர் உண்ணத் தாகம் எடுப்பது போல, பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை. அந்த ஆசை துரத்துகிறது என்பதற்காக ஐயனே! என்னைப் பிரிந்து வாழ எண்ண வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதனை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்தனவே அதனையும் எண்ணிப்பார்.

தொய்யில்:(Tatoo/Mehandhi)
மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு.

அந்தச் சந்தனக்குழம்பை விருப்பத்தோடு தலைவன் தலைவியின் தோளில் பூசுகிறானாம். பின் தலைவனின் வலிய மார்பில் தலைவி சாய்ந்துகொள்ளும் போது அந்தத் தொய்யில் கோடுகள் அவனது மார்பில் ஒட்டிக்கொள்கிறதாம்.என்ன ஒரு காட்சிப் படிமம்!

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
கலித்தொகை 18

Comments