சடல சாந்தி - தெரிசை சிவா - பவா செல்லதுரை
1. நீலவெளிச்சம்
2. பூவன்பழம்
இந்த இரண்டும் பஷீருடையது. உலகப்புகழ்பெற்ற மூக்கு தொகுப்பிலிருக்கிறது.
இந்த வரிசையில் மூன்றாவதாய் இணைந்திருக்கிறது
தெரிசை சிவாவின் - சடல சாந்தி.
வேலையினூடே பவா சொல்ல இந்தக் கதையைக் கேட்டேன். கடைசி ஆறு ஏழு நிமிடங்கள் பொட்டிலறைந்தார் போல ஒரு shock treatment.
இதன்மூலம் சிவா, பஷீரைப் போல என்று சொல்ல முற்படவில்லை. பஷீரைப் போல இந்த உலகில் பஷீர் மட்டும் தான். ஆனால் இந்தக் கதை, நீலவெளிச்சம் எதைச் செய்ததோ அதைப் போலவே என்னென்னவோ வேறு வேறு வடிவிலான treatmentஇன் மூலம் என்னென்ன உணர்வுகளையோ கிளர்த்திவிடுகிறது. அது மட்டும் நிச்சயம்.
மிஷ்கினின் சைக்கோ படத்தின் முன்னோட்டத்தில் வருகிற பின்னணி இசை முற்றிலும் பொருந்திப்போகிற இறுதி வரிகள் கொண்ட ஒரு சிறுகதை.
Unmai than
ReplyDelete