சக்தியின் கூத்தில் ஒளி ஒரு தாளம்
சக்தியே தெய்வம் :

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒர் குமிழியாம் சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஓர் மலர். சக்தி அநந்தம், எல்லையற்றது. முடிவற்றது.

இதனை அடுத்து வரும் அடிகளில் சக்தியின் லீலா விநோதங்களை அற்புதமாகக் காட்டுவார்.

பிரமன் மகள், கண்ணன் தங்கை; சிவன் மனைவி. கண்ணன் மனைவி, சிவன் மகள், பிரமன் தங்கை. பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்

என்று புராணக் கருத்துகளையெல்லாம் தொகுத்து-மலையாள அவியல் போல் சுவையாகக் காட்டுவார். கவிஞரின் கற்பனை உல கெல்லாம் விரிந்து செல்கின்றது; விரிந்த பார்வையில் அனைத்தையும் காண்கின்றார்; நாம் விசுவரூப தரிசனத்தைக் காண்கின்றோம்.

சக்தி முதற் பொருள்.

பொருளில்லாப் பொருளின் விளையில்லா விளைவு. சக்திக் கடலிலே ஞாயிறு ஒர்துரை; சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு; ஒரு ஸ்வர ஸ்தானம். சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம். சக்தியின் கலைகளிலே ஒளியொன்று.

சக்தி வாழ்க..’

Comments