பிரபஞ்சனின் சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள்


பிரபஞ்சன் 5
~
பிரபஞ்சன் (பிரபஞ்சனின் கதாப்பாத்திரங்கள்) பேசுகிற வசனங்களிலிருந்து சில உங்களுக்காக :

1. அவர்கள் எழுந்து என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். அர்த்தம், பேமானி.

2. சில முகங்களைத் தான் பார்த்துப் பேச முடிகிறது

3.குளித்துக்கொண்டிருந்த போது மப்டியில் இருந்த போலீசாரால் கேசவன் கைது செய்யப்பட்டான்

4.கிச்சானைப் பார்ப்பதே ஓர் அனுபவம்.என்னமோ அதைப் பார்த்தவுடன், நம் மனசில் ஒரு சந்தோஷம் பற்றிக்கொள்ளும். ஆள் குண்டு. குண்டென்றால் சாதாரணக் குண்டில்லை. பீரங்கிக் குண்டு

5.நானும் சுமதியும் பேசிக்கொள்ள ஒன்றுமில்லை. பேசினால்தானா? ' ரொம்ப சூடாக இருக்கே காப்பி, ஆற்றிக்கொள்ள இன்னொரு டம்ளர் கொடேன்' என்றுதான் ஏதேனும் பேசத் தோன்றும். அதுவே போதும்தானே?

இதில் மூன்றாவது , ஒரு சிறுகதையின் தொடக்க வரி. படித்துவிட்டு புத்தகத்தை மூடி வைத்துவிட்டுச் சிரித்தது நியாபகம் இருக்கிறது. ஒரு பேச்சுக்காகக் கூட எப்படி ஒரு மனிதனால் இப்படி எழுத முடியுமென்று அந்த முதல் வரி தந்த தூண்டுதலாலேயே முழு சிறுகதையையும் படித்து முடித்தேன். அந்தச் சிறுகதை இன்று வரை ஒரு மறக்க முடியாத சிறுகதையாக நினைவிருக்கிறது எனக்கு. தலைப்பு 'கருணையினால்தான்'

பேமானி, பீரங்கி குண்டு போன்ற சொற்களில் பஷீரின் நகைச்சுவையுணர்வை, பஷீரிடம் இருக்கும் அதே சொற்சேட்டைகளை பிரபஞ்சனிடத்திலும் உணர்வேன்.

#பிரபஞ்சன்

Comments