அயோத்திதாசர் - அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்


மிக மிக அரு'மெய்'யான உரை
~
இந்த ஆண்டு வெளியாகியிருக்கிற அயோத்திதாசர் நூலைப் பற்றி அறிந்து வாசிக்க முன்பே ஆவலாய் இருந்தேன். அவசியம் வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆவல் இந்த உரையைக் கேட்ட பின் இன்னும் அதிகமாகியிருக்கிறது.

ஒரு புத்தகத்தை எழுதுவது முக்கியமல்ல. எழுத்தை, படைப்பை பேசத் தெரிய வேண்டும். படைப்புகளை, வாழ்க்கையை, எழுதிய அதே உயிரோட்டத்துடன் பேசக்கூடியவர்களில் எனக்கு மிகப்பிடித்தவர்கள் ஜெயகாந்தனும், பிரபஞ்சனும், பாரதி கிருஷ்ணகுமாரும் தான். அதற்குப் பின் யோசித்துப் பார்த்தாலும் யாரும் நினைவுக்கு வர மறுக்கிறார்கள்.

டி.தருமராஜ் அவர்களின் இந்த உரை மிக நேர்த்தியாகவும், கருத்தச் செறிவுடனும் அமைந்திருக்கிறது. படைப்பின் மைய ஓட்டத்தை சொல்லிலும் ஏந்தி உரை வீசியிருக்கிறார் ஆசிரியர்.

ஒரு புத்தகத்தை தவம் போல ஏற்று எழுதுகிறவர்கள் மிகச்சொற்பம். அந்த வரிசையில் இவரையும் வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. எழுதுகிறேன் என்று எதையாவது எழுதாமல், காத்திருத்தலையும், ஒரு படைப்பை சிருட்டிக்க, தன் ஆழ்மன வெளியை சீர் செய்வதற்காக ஒரு படைப்பாளர் எடுத்துக்கொள்ள வேண்டிய சிரத்தையையும், பொறுமையையும், நேர்மையையும் எனக்குத் தன் பேச்சினூடே கற்றுத் தருகிறார்.

இந்தப் புத்தகத்துக்கான எழுத்தாளார் ஜெயமோகன் உரையும் அருமை. அவசியம் கேட்டே ஆகவேண்டும் என்று இந்த உரையைக் கேட்கச் செய்தது ஶ்ரீநிதி தான். அவருக்கு நன்றி.

கிழக்குப் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த விழாவை ஒளிப்பதிவு செய்தருளிய சுருதி டீவிக்கு நன்றி !

#அயோத்திதாசர்

https://youtu.be/9SmVdoRWU_o

Comments