யுவன் சங்கர் ராஜா
யுவனின் இரண்டு பாடல்கள் சமீப காலமாக மனதின் எல்லா திசைகளிலும் மீண்டும் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. அத்தனை ஆழமான பாடல் என்று கேட்கிற ஒவ்வொரு முறையும் தோன்றி மனம் நிறைந்து போகிறது.
1. அன்பே அன்பே - NGK
2. நீயும் நானும் - சிந்துபாத்
இதில் NGK பதினைந்து நிமிடங்களுக்கு மேல் படம் பார்க்கவில்லை. சிந்துபாத்தும் இன்னும் இதுவரை பார்க்கவில்லை.
ஆனால் இந்த இரண்டு பாடல்களும் யுவனின் சமீபத்திய அற்புதங்கள் என்று சொல்வேன். இந்தப் பாடலைக் கேட்கக் கேட்க யுவனை மேலும் மேலும் காதலிக்கிறேன்.
அவருக்காக மனம் சந்தோஷத்தில் கிடந்து தவிக்கிறது. ராஜாக்களுக்கு ஒருபோதும் வீழ்ச்சியோ சரிவோ கிடையவே கிடையாது என்றுதான் தோன்றுகிறது.
*
வேண்டாம்
என்றே
காலம்
கூறும்
போதும்
என்றே
பாதம்
வேகும்
ஆனாலும் மலைதாண்டி
தீராத கடல்தாண்டி
தீ தாண்டி வருவேனே
பொறு கண்மணி
*
ஒவ்வொரு சொல்லாய் பாடப் படுகிற இந்த வரிகள்
மனதைத்
துளையிட்டுத்
துளையிட்டுத்
துளையிட்டுத்
துளையிட்டு
உட்செல்கிறது.
பாரதி சொல்வான்...
"எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
யிரவினைப் போன்ற முகத்தாய்!
முத்தம் இட்டுப்
பலமுத்த மிட்டுப்
பலமுத்தம் இட்டுனைச்
சேர்ந்திட வந்தேன்" என்று
இந்த முத்தமிட்டு முத்தமிட்டு முத்தமிட்டுக் கொள்கிற
காதல் ரசத்தை, அன்பின் களியாட்டத்தை, அந்த ECSTATIC உணர்வின் ரசமான அதிர்வை இந்தப் பாடலும் எனக்குத் தந்தது
Karthik Netha
இன்று தான் கவனித்துப் பார்த்தேன் வரிகள் உங்களுடையது என்று. அற்புதமான சொற்களுக்கும், வரிகளுக்கும் மனமார்ந்த நன்றி !!!!
மிக ஆழமான பாடல்கள் இரண்டும்.
இதில் சிந்துபாத் காணொளிப் பாடலுக்கு வெறும் 2.9 K லைக்குகள். இந்த உலகத்து மக்கள் இந்தப் பாடலையெல்லாம் விட்டுவிட்டு வேறு எங்கு போய் எதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் :(
#yuvanshankarraaja
Comments
Post a Comment