தமிழிசையின் தொன்மை - கருணாமிர்தசாகரம் - ஆபிரகாம் பண்டிதர்

தமிழிசையின் தொன்மை :

ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை மூலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட 'கருணாமிர்தசாகரம்' இணையதளத்தை இன்று தான் அறிந்தேன்.

பாரம்பரியத் தமிழிசை குறித்த தெளிவைத் தருகிறது ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூல் மற்றும் அந்தத் தளத்தில் இடம்பெற்றிருக்கும் காணொளிகள்.

இந்த ஆவணத்தில், ஆபிரகாம் பண்டிதரின் குடும்பத்திலிருந்து சில பேர் ஆபிரகாம் பண்டிதரின் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடல்களை அபூபக்கர் பாடியிருக்கிறார். ஓதுவார் ஒருவர் தேவாரம் பாடியிருக்கிறார்.

தேவாரம் பாடுகிற ஓதுவாருக்கும், மஸ்தானின் பாடலைப் பாடும் அபுபக்கருக்கும் ஒரே குரல். இசையின் மிகத்தொன்மையான தெய்வீகக் குரல்!

ரஹ்மான் அளப்பரிய சில அதியசங்களைச் சத்தமின்றிச் செய்துகொண்டிருக்கிறார். அவர் இன்னும் பல தொண்டுகள் புரிய வேண்டும்.

ஆபிரகாம் பண்டிதரின் தமிழ் இசை ஆராய்ச்சி தொடர்பான நூல் உலகத்தமிழ் ஆராய்ச்சி தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. நூறாண்டுக்கு முன் வெளியான நூலை மிகத்தரமான மின் நூலாக்கித் தந்திருக்கிறார்கள்.  காகிதப் பதிப்பு 4500 ரூபாய்க்கு மேலிருக்கிறது. அரிய பொக்கிசமான நூல். இப்போதைக்குத் தளத்தில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். ஊருக்கு வந்ததும் ஒன்று வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்.

நூல் இப்படித் தொடங்குகிறது.
~
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
~
யோவான் 1:1

இசைக்கு மொழியோ, சாதியோ, மதமோ இல்லை என்பதை இன்னும் தீர்க்கமாய் அறிந்துகொண்ட இன்னொரு அற்புதமான நாள் இன்று !

#தமிழிசை

பின் குறிப்பு : இது தமிழிசை தொடர்பான முதல் ஆய்வு நூல், அதன் நுட்பங்களை விளக்கும் நூல், எல்லோரும் வாசித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம் என்று தான் நினைக்கிறேன், ஆனால் இந்தத் தளத்தில் இருக்கும் காணொளிகளை அவசியம் காணுங்கள்

https://karunamirthasagaram.org/

உங்களை தெய்வக்குரல் ஒன்று தளத்திற்குள் வரவேற்கும்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!


  • #ARRahman #KuttiRevathi #ஆபிரகாம்பண்டிதர் #தமிழ்த்தொன்மை

Comments