சொல்வேயும் அணில்

சொல் வேயும் அணில்
~
சொல் சொல்லாய் வேய்ந்துகொண்டிருக்கிறது
ஓர் அணில்
அவனுக்கான நிழலை

அதன் பாதையில்
வீசப்படும் ஒவ்வொரு
முந்திரிக்கும் ஏறிச் செருகுகிறது
வாழ்வின் மேற்கூரையில்
ஒவ்வொரு நற்சொல்லை
அவனுக்காய்

துயரடர்ந்த நாளிலோவெனில்
மௌனத்தின் உருண்டைகளை
வீசி எறிகிறான் அவன்
அணில்களற்ற பசும்பாதையில்

இருண்ட மௌனத்தின்
சற்றே தொலைவிலிருந்து
இரண்டு பழைய முந்திரிகளை
கைகூப்பித் தின்றுவிட்டு
சரசரத்துப் தாவிவந்து
இரண்டு சொற்களை வேய்ந்துவிட்டுத்
திரும்புமந்த அணில்
அப்போதெல்லாம்
அவனுக்காய்
.
.
எத்தனை நிழல்கள்
அன்றாடம் இப்படி
எத்தனை அணில்கள்
அன்றாடத்தின் பாதையில்

எது பேரழகு?
மனவெளியின்
மலைப்பாதையை விட்டால்

~

Comments

Popular Posts