கடவுளோடு ஒரு சமரசம்


~
கடவுளைத் திட்டத் தொடங்கியிருந்த
வழக்கமான ஞாயிற்றின் பின்னிரவு
இன்னும் உறங்காத சீடனின்
குரலில் குரு கேட்டார்
இரவிடம்

கடவுளே!
ஒன்று கூடக் குறைய சராசரியாக
முன்னூற்றி அறுபத்தி ஐந்து துயரங்கள் கொண்ட 
தொகுப்பு தானே நீயும் நானும்

விடிந்தால்
ஏனதில் நாம் ஒன்றைக்
குறைத்துக்கொள்வதற்கான
சமரசப் பேச்சில்
ஈடுபடக்கூடாது?

குருவின் குரலில்
இரவு சொன்னது
ஆசைதான் எனக்கும்
ஒன்றைக் குறைத்தாலும்
மனிதர்கள்
கடவுளென்கிறார்களே
தங்களை
~
சேரவஞ்சி

Comments