தீரத்தில் ஓர் உரையாடல்


சூரியனை விழுங்கும்
மலை தொடங்குகிற
அக்கரையின் அடிவாரத்துக்கு
சிற்றோடம் ஏறித்
திரும்புகிறோம்
அன்றாடம் அந்தியில்
"துடுப்பு வடிவிலானது
தெய்வம்" என்று
போராடினோமா இல்லை
எனினும்
தீரத்தில் இறங்குகையில்
ஒரேயொரு பிரார்த்தனையை
நம்மிடம் வைத்தது ஒரு நாள்
"நண்பர்களே!மறந்தும் என்னைக் காட்டிக்
கொடுத்துவிடாதீர்கள்
சக மனிதர்களிடம்..
மலையேறிச் சூரியன் பார்க்க நினைக்கிறவர்கள் அவரவர்களாகக் கண்டடையவேண்டும்
அவர்களுக்கான நதியை
அவர்களுக்கான ஓடத்தை
அவர்களுக்கான துடுப்பை"
~சேரவஞ்சி
தீரத்தில் ஓர் உரையாடல்

Comments