வலசை
ஏதொன்றுக்கும்
எதிர்க்குரலெழுப்பாத பறவையொன்று
வலசை போகையிலெல்லாம் வந்து
சிக்கிக்கொள்வது வாடிக்கைதான்
அவர் தொண்டைக்குள்


ஏதொன்றுக்கும்
எதிர்க்குரலெழுப்பாத இவரும்
வழமை நழுவி
வலசை போனார்
ஒரு சொற்சண்டை வீரரிடம்
ஓர் அதிகாலையில்

ஏதொன்றும் பேசவியலாத
எத்தனையோ எத்தனிப்புகளின்
விளிம்பில் நின்று
ஓவியமொன்றை வரைந்தார்

ஒரு பெருஞ்சுவற்றில்
நியாய தர்மங்களின் நாலு
வண்ணம் தொட்டு
நரிகள் சண்டையிடும் வனம்
தனிப்பறவை பறக்கும் வானம்
சிறகடிப்பின் மழுங்கிய சப்தம்
~
சேரவஞ்சி

Comments