பொறுத்தருளல்

காலம் எங்களை மரமாக்கும்
வாழ்வு தருகிற காற்றைத் தருவோம்
காலம் எங்களை உரமாக்கும்
தாங்கும் மண்ணை தழுவிக்கொள்வோம்
காலம் எங்களை தீயாக்கித் தணிக்கும்
காற்றின் திசையெட்டும் கலந்தேகுவோம்
காலம் எங்களை நீராக்கும்
கானெல்லாம் நாளும்யாம்
பொழி பொழிந்திருப்போம்
காலம் எங்களைக் காலமாக்கும்
பொறுத்தருள்க அதுவரை
மனிதனாய் மட்டுமே
இருக்க இயலும்
~
சேரவஞ்சி

Comments