பூச்சுடிய அனில்கோயில்

இழுத்துப் போகிறது
ஒரு பட்டைக்கூம்பு
என்னைத் தன்
ஒற்றைச்சக்கரமாய்க்
கட்டி
சுழல்கையில்
கேட்கிறது மனிதக்குரல்கள்
மத்தியிலிருந்து
அதன் மேற்பகுதியை
உரசுகையில் மட்டும்
என் காதுகளில்
"எங்கே போகிறீர்கள்?"
என்று கேட்பதற்குள்
எட்டியிருந்தேன்
ஏழாயிரத்து இருபத்தி
எட்டு சுற்றுகளை
வாழ்வின் இரண்டு மூன்று மைல்களையாவது
கடந்திருப்பேனா தெரியவில்லை
"நிம்மதியின்
கூம்புக் கோவிலுக்குச்
செல்கிறோம் நீயும் வா"
என்றார்கள் கூட்டுக்குரலில்
இருபதாயிரத்து
எட்டு முறை சுற்றியிருந்தேன்
இப்பதிலை நான் கேட்டு முடிப்பதற்குள்
என் காற்று குறைந்துகொண்டிருந்தது
பக்கவாட்டில் சரிந்துகொண்டிருந்த
பட்டைக்கூம்பின் கண்களுக்குள்
மலைக்கோவில்
தென்பட்டது சிறியதாய்
பூச்சூடிய அணிலொன்று
வெளியேறிக்கொண்டிருந்ததைப்
பார்த்தேன் என் கண்களுக்குள்
அவ்வாசலிலிருந்து
இமைப்பொழுதுதான்
அக்காட்சி
சரிந்து விழுந்தது
சாய்கோணம் ஆகையில்
வெளியில் பறந்து
வெறுந்துகளானேன்
மௌனமாய்
பறந்துகொண்டிருந்தது
மண்ணிலிருந்து
எங்கெங்கும்
~
Comments
Post a Comment