ஒளியின் வாடிக்கைஒளியின் வாடிக்கை
~
யாரேனும் ஏந்த வேண்டும் முதலில்
அசைந்தாடிக்கொண்டிருக்கிற
அவர்களின் சுடரின்
பலவீனத்தை

புரிந்துணர்வின் கோட்டையில்
கூடவேண்டும் எல்லோரும்
அதற்கு முன் அவசரமாய்

யாரேனும் ஆற்ற வேண்டும்
சம்பிரதாயமான ஓர் உரையை

அசைவதும்
அணைவதும்
சுடரின் வாடிக்கை

சொல்லியே
தீரவேண்டும்
இதை மட்டும்

கோட்டையில் கூடாது கூட்டம்
பேச்சைக் கேட்காது காதுகள்
எதுவும் நடக்காது இப்போதைக்கு

அசையும் சுடரை
அணையும் ஒளியை
பார்த்துக்கொண்டே இருப்பார்கள்
வருந்திக்கொண்டே இருப்பார்கள்
எதுவும் நடக்காது

நான் கூடுகிறேன் கோட்டையில்
நான் ஆற்றுகிறேன் சிற்றுரையை
நான் சொல்கிறேன் இதை
சன்னமான சுடரின் குரலில்..

"அணைந்தே தீரும் சுடர்"

வலி மிளிரும் இவ்வுண்மையை
சொல்லும் வலி பெரிதெனினும்
மெல்லும் வலி அதைவிடப் பெரிது


Comments