ஞானியின் மூன்று கேள்விகள்

பனிப்பொழிவில்
தடம் பதிக்க வந்திருந்த
ஞானியிடம் சற்று
வாயளந்தேன்
சற்றே
தடம் புரண்டிருந்த
நன்றியுணர்வின் மேல்
கைவைத்துக்
கேட்டார்..
1
அன்றாடம் உதிக்கிற
சூரியனை
அந்தியிலாவது
ஏந்துகிறாயா மனதில்?
2
நதியொன்று நீள்கிறதே
அகத்திற்குள்
நன்றியை எப்படிச் சொல்கிறாய்
அதன் கிளைகளுக்கு நீ?
3
சாக்காட்டின் இரவிற்குள்
கறையவில்லை நீ குழலிசையாய் இன்னும்
வாழ்வின் பறையிசையைப்
பேசிமுடித்தாயா எல்லோரிடமும்?
உயரத்தில்
ஒரு பறவை வந்தமர்ந்தது கிளையில்
அதன் இறகில் வந்தமர்ந்தது ஒன்று
என் தோளில்
ஞானியைப்
பார்த்தாலோ
காணோமே
எங்கும்
~
Comments
Post a Comment