பழைய தெய்வத்தின் பாழடைந்த கோவில்
பழைய தெய்வத்தின் பாழடைந்த கோவில்
~
இடையில்
வழிபாட்டுக்கு
இறைஞ்சவிட்டார்கள்
அவர்கள்
"இறைஞ்சிப் பெறும் எதுவொன்றுமே
உயர்ந்த பொருளின் ஒப்பற்ற வடிவம்"
என்கிற
மனோதத்துவத்தின் மண்ணில்
ஆழ விதைத்தார்கள்
வண்ணப்பலவிதைகளை
கடவுளென்றார்கள்
நட்டு விளைத்த நளின
உருவங்களையெல்லாம்
இறைஞ்சுதலின் புதுப்போதையில்
மிதந்திருந்த இவர்களோ
சுவடற்று
நீந்திக்கொண்டிருந்தார்கள்
காலவெள்ளத்தில்
கரை தரை காணாத ஓர்
மரப்பந்து போல்
தடுத்து நிறுத்திய ஓர் பெரும் கல்லைப்
தாங்கிப் பிடித்தார்கள் கெட்டியாய்
நினைவுதட்டிய சற்றைக்கெல்லாம்
நீந்தி மீண்டெழுந்தார்கள்
பழைய தெய்வத்தின்
பாழடைந்த ஒரு கோவிலில்
~
Comments
Post a Comment