சொற்களின் தொங்குபாலம்

சொற்களின் தொங்குபாலம்
~

வெற்றுச் சொற்களின்
தொங்குபாலத்தில்
சென்றுகொண்டிருக்கிறோம்

நீள்கிறது பாலம்
சொற்கள் சேரச் சேர

பல மைல் சொல்கடந்து
பக்கத்து மலையின்
உச்சியை
அடைந்திட்டோம்

சொல்லிலிருந்து சிந்திய
மௌனத்தைக் கையில்
ஏந்தி வருகிறது காலம்
நாம் வந்த அதே திசையிலிருந்து

நடுவில் நின்று
ஒரு குதி குதித்தால்
நாமும்
நம் சொற்களும்
என்னாவோம்
நண்பா?

~
சேரவஞ்சி

Comments