யாரிடமாவது பேசவேண்டும்

~
யாரிடமாவது பேசவேண்டும்
அலகால்
தன் சிறகை உரசிக் கொள்கிறது
பறவை

அரைவட்டத்திற்குத்
தும்பிக்கையை
உயர்த்திக்காட்டுகிறது
பிடி யானை

மண்ணைப்
பறித்துக்கொண்டிருக்கிறது
தெருநாய்

காலைச் சொரிந்துகொண்டிருக்கிறது
பூனை தன் மற்றொரு காலால்

இருட்டுக் குளக்கரையில்
மீனுக்குப் பொரி போடுகிறார்
ஓர் ஊமை
~

சேரவஞ்சி

Comments