குற்றுயிரின் சுயசரிதம்

~
மிக எளிய
சுவடுகளைப் பதித்துச் செல்கிற நடை
எந்த மலையையும்
ஏறிக் கடக்க மலைக்காத மனம்
எல்லா வனத்தினூடும்
ஊரச் சலிக்காத கால்களின் தினவு
நீண்ட நதியை
இலையிலேறி கடக்கத்
தெரியும்
மழைக்கு ஒதுங்க
சருகுக்குடை போதும்
மரங்களின் தோள்கள்
இளைப்பாரும் ஊஞ்சலெனக்கு
பாறையிடுக்கைச் சீண்டுவதில்லை
சூறைக்காற்று
அங்கே இருப்பேன்
அப்போதெல்லாம்
சிற்றெறும்பொத்த
குற்றுயிரி
காணும் மனிதரின்
கணிசமான கால்களால்
எத்துப்பட்டிருக்கிற
வாழ்வு தான்
எனக்கு எனினும்
மலை எனது
வான் எனது
தா என்றால்
தந்து போகிற
தெய்வப் போக்கு
துரும்பை உண்கிறேன்
துரும்பாய் ஊர்கிறேன்
அச்சமுறுவதில்லை
என் வருகையை எண்ணி
எந்த மலையும் எந்த நிலமும்
மிக முக்கியம்
தீர்க்கத்தின் உச்சியில்
தழல்கிற நிசியில் பேரொளி
மற்றைய நிமித்தம்
மண்ணின் சிறு துகள்
~
சேரவஞ்சி
(குற்றுயிரின் சுயசரிதம்)
வாழ்வு தான்
எனக்கு எனினும்
மலை எனது
வான் எனது
தா என்றால்
தந்து போகிற
தெய்வப் போக்கு
துரும்பை உண்கிறேன்
துரும்பாய் ஊர்கிறேன்
அச்சமுறுவதில்லை
என் வருகையை எண்ணி
எந்த மலையும் எந்த நிலமும்
மிக முக்கியம்
தீர்க்கத்தின் உச்சியில்
தழல்கிற நிசியில் பேரொளி
மற்றைய நிமித்தம்
மண்ணின் சிறு துகள்
~
சேரவஞ்சி
(குற்றுயிரின் சுயசரிதம்)
Comments
Post a Comment