விருப்பம்
கூடு பின்னிக்கொண்டிருக்கிறது
கொல்லையில் கின்னகம்
பயிர்களின்
இலை நரம்பைக்கொண்டு


சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது
இரு ஆண் பறவைகள்
முன்றிலில் தீவிரமாய்

ஒன்றைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
விருப்பமாய் இதில்
நீங்களும் பெண் பறவையும்


~

சேரவஞ்சி

(விருப்பம்)

Comments