மூன்று பேரும் ஒரே உரையாடலும்சனிக்கிழமையிலிருந்து
ஞாயிற்றுக்கிழமைக்குள்
நுழைகிற ஓர் சாலையில் தான்
சரியாக அவரைச் சந்தித்தேன்
அம் மலைச்சரிவில்

கடவுளைச் சந்தித்துவிட்டு
வருவதாகச் சொன்னார்
கைக்குழியில் தவழ்ந்த ஓர்
அணிலைத்
தடவிக்கொண்டே

புன்னகைத்துக்
கடந்த பாதையில்
புதிதாய்த் தென்பட்டார்
இன்னொருவர்

கடவுளைச் சந்தித்துவிட்டு
வருவதாகச் சொன்னேன்
இந்த முறை நான்
முந்திக்கொண்டு

குரலெல்லாம் ஒரே
தீர்க்கத்தின் குளிர்

~
சேரவஞ்சி

Comments