வீல் என்று புலரும் காலை

~

வெருகுப் பூனையின்
வாலணைத்து
உறங்குகிறது இவ்விரவு
நிம்மதியாய்


ஏழு கைகளுடன்
எதோவொன்று விரட்டுகிற
கனவொன்று எதிர்ப்பட
இறுகப் பற்றுகிறது மிரட்சியில்
கயிற்றொன்றைப் போலொன்றின்
வழுக்கு நுனியை

நாள் ஒன்று புலர்கிறது
வழக்கம்போல
'வீல்' என்ற சப்தத்தின்
அவலத்தோடு

~
சேரவஞ்சி

Comments