முக்கோண இரகசியம்

~
கீழிருந்து திறக்கிற
கண்ணாடிச் சாளரத்தின்
முன் திரைச்சீலையில்
இடது மூலையைச்
சரியாகச் சற்று
கிள்ளிப் பார்த்தாலே
விரிகிறது வனம்
கண்ணின் முழுமைக்கும்
முழுத் திரைச்சீலையையும்
விலக்கியபோதிலோ
தன் பாட்டுக்கு
அமைந்திருக்கிறது காடு
அசைவின் இசையில்
துளியுமற்று
முக்கோணச் சிறு வடிவில்
மடித்துப் பார்த்தாலோ
இடது மூலையை..
வெட்கிச் சிரிக்கின்றன மரங்கள்
சருகுகளின் சலசலப்புக்கிடையில்
கணக்கற்ற அணில்தடங்கள்
கிளைகளெங்கும் பறவைக்கூட்டம்
செம்போத்தின் நடனம் உண்டு
சோடிப்பின் கூடுதலாய்
எந்தப் பறவை
அசரீரித்திருக்கும்
என் கனவில்..
இசைமயமான
இவ்வனத்தைத்
திறக்க..
முக்கோண வடிவில்
முதல் முறை கிள்ள?
~
சேரவஞ்சி
(முக்கோண இரகசியம்)
சருகுகளின் சலசலப்புக்கிடையில்
கணக்கற்ற அணில்தடங்கள்
கிளைகளெங்கும் பறவைக்கூட்டம்
செம்போத்தின் நடனம் உண்டு
சோடிப்பின் கூடுதலாய்
எந்தப் பறவை
அசரீரித்திருக்கும்
என் கனவில்..
இசைமயமான
இவ்வனத்தைத்
திறக்க..
முக்கோண வடிவில்
முதல் முறை கிள்ள?
~
சேரவஞ்சி
(முக்கோண இரகசியம்)
Comments
Post a Comment