அதனதன் போக்கு

நீரின் சுவையை
வியக்கிறோம்
நதிக்கும் எங்களுக்கும்
தொடர்பில்லை
என்கிறார்கள்

சலனமில்லை ஒன்றும்
அதன்பாட்டுக்கு
ஓடிக்கொண்டிருக்கிறது
ஆழ் நதி

அடுத்தமுறையும்
அள்ளிப் பருகலாம்
நீரின் இசையை
அற்புதமாய் வாயாடலாம்
எதிர்ப்பாரில்லை

வசைபாடலாம்
அதன் கறையில்
அமர்ந்துகொண்டே
வசதியாய்

தலைமேல்
கால்போட்டுக்கொள்ளலாம்
இன்னும்
வசதியிருக்கிறவர்கள்


நதியின்
போக்கு
நதிக்கு


~

Comments