சித்திரக்காரனின் பெருஞ்சுவர்

சித்திரக்காரன் ஒரு
சுவர் வைத்திருக்கிறான்
ஊர்களற்ற
வனம்
தனித்தனிச் சன்னதிக்குள்
பறவைகள் எழுந்தருளியிருக்கும்
கோவில்கள்
யானைகள் தேய்த்த
பாதத்தின் பாதைகள்
பாதைகளின்
கருணையில்
பக்கவாட்டில் மரங்கள்
உச்சிநின்று
வீழும் அருவி
கீழ்ப்பக்கம்
பெருநதி
காட்டுச்சிவப்பில்
அந்திச்சூரியன்
சித்திரக்காரன்
ஒரு சுவர் வைத்திருக்கிறான்
வெள்ளை வெளேரென
நாளொரு வண்ணம்
பொழுதொரு கற்பனை
நோக்க நோக்கக்
களியாட்டம் அதில்
~
சேரவஞ்சி
Comments
Post a Comment