அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்


இரண்டு படங்கள் பார்த்தோம். 
மிக மிக முக்கியமான, மிக மிக அற்புதமான இரண்டு திரைப்படங்கள். 

1. Thappad - Hindi
2. Green Book - English

தப்பட். 

இதுதான் திமிர்த்தனம், அல்லது ஆதிக்க மனநிலை என்று ஒருபோதும் அறிந்திராமல் பெண்களுக்கெதிராகவே ஒரு முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்துவிடும் ஆணாதிக்கவாதிகள் பற்றிய அட்டகாசமான படம். எப்போதையும் விட இந்தப் படத்திற்கான தேவை இப்போதுதான் அதிகமாக இருக்கிறதென்று உணர்கிறேன். கச்சிதமான பாத்திர வடிவமைப்பு, அற்புதமான வசனங்கள். அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். 

க்ரீன்புக்.

கலையில் ஈடுபட்டிருக்கிற ஒருவன் கலையை விட மிக முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டியது அந்தக் கலையைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் பழைய காலப் பூனைகளான அரசிலை.  உங்களுக்குள் இருக்கும் இனவெறி, மதவெறி, நிறவெறி, சாதிவெறி எல்லாவற்றையும் சட்டைக் காலரைப் பிடித்துக் கேள்வி கேட்கிற படம். ஆஸ்கர் கொடுக்கப்பட்டதற்கு பின் பாதி பார்த்து ஏனோ அதைப் பார்த்து முடிக்காமல் விட்டுவிட்டோம். நேற்று பார்த்து முடிக்கையில் அத்தனை மனநிறைவு. நம்முடைய கலையும், நாம் முன்னெடுத்துச் செல்ல நினைக்கிற அரசியலும் எத்தனை நியாயமானது என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துகொள்ள உதவிய படம். கடைசிக் காட்சியில் சிறுதுளி கண்ணீரைப் பரிசாகப் பெற்றுப் போகிற வகையில் மனித்தை உயர்வாகத் தூக்கிப் பிடிக்கிற படம். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். சொல்வதற்கு குறிப்பாக ஒன்றுமில்லை. பரிபூரண, பரிபூரண, பரிபூரண, பரிபூரண, பரிபூரணத் திருப்தியளித்த படம்..

இந்த இரண்டு படங்களும் உங்கள் மனதை எதாவது ஒருவிதத்தில் உறுத்துமேயானால் உங்களை நீங்கள் பண்படுத்திக்கொள்ளவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்றறிந்துகொள்ளுங்கள். 

இன, மத, சாதி வெறியர்களுக்கும், ஆணாதிக்கவாதிகளுக்கும் இந்தப் படங்கள் சமர்ப்பணம்.

Comments